மதிமுக வேட்பாளர் துரை வைகோ!

திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக வேட்பாளர் துரை வைகோ!

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மதிமுக ஆட்சி மன்றக்குழுக் கூட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒரு மனதாக துரை வைகோவின் பெயரை முன்மொழிந்ததாக வைகோ தெரிவித்தார்.

பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ மேலும் தெரிவித்தார்.

மதிமுக வேட்பாளர் துரை வைகோ!
மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இம்முறை திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com