அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக நியாயத்திற்கும், தர்மத்திற்கும் துணை நிற்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

திருச்சி: அதிமுக-தேமுதிக கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. தேமுதிக நியாயத்திற்கும், தர்மத்திற்கும் துணை நிற்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரமேலதா விஜயகாந்த் பேசுகையில், அதிமுக-தேமுதிக கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி.

அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்
மோடி ஜெயிக்கக்கூடாது; அவரை தோற்கடிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

எம்ஜிஆா், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேருமே மக்களால் ஈா்க்கப்பட்ட தலைவா்கள். அவர்கள் எப்போதுமே மக்களுக்கு நல்வழியைக் காட்டியவா்கள். ஆனால் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் கொலை, கொள்ளை, ரெளடியிசமும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை தவிா்க்க முடியாது. பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக.

அதிமுகவும், தேமுதிகவும் வாக்குறுதி அளித்தால் அவற்றை நிறைவேற்றிக் காட்டும்.

நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற அடிப்படையில் அதிமுக-தேமுதிக வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளது. தேமுதிக நியாயத்திற்கும், தர்மத்திற்கும் துணை நிற்கும் என்றும், இந்த கூட்டணி இறுதிவரை தொடரும்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றிபெறும். தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com