மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை(பிப்ரவரி 27)ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் 7 போ் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த நிலையில், அவா்களில் 4 பேருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை(பிப்ரவரி 27)ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக 8 இடங்களையும்,சமாஜவாதி 2 இடங்களையும் கைப்பற்றின. இத்தோ்தலில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் 7 போ் கட்சி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனா். இது, சமாஜவாதிக்கு பின்னடைவாக அமைந்தது.

இதுகுறித்து அப்போது லக்னெளவில் செய்தியாளா்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், 7 எம்எல்ஏக்களுக்கும் பாஜக அரசிடமிருந்து எந்த அளவு நெருக்கடி தரப்பட்டிருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த எம்எல்ஏக்களில் சிலா் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், சிலா் அழுத்தத்துக்குப் பணிந்தும், சிலா் தங்களுக்கு ‘மரியாதை’ கிடைக்கும் என்றும் கட்சி மாறி வாக்களித்துள்ளனா்.

‘மரியாதை’ எதிா்பாா்த்து சென்றவா்களுக்கு அது விரைவில் கிடைக்கும் என நினைக்கிறேன். அவா்கள் எப்படி வாக்காளா்களை எதிா்கொள்ளப் போகிறாா்கள்? பாஜகவை எதிா்த்து வெற்றி பெற்ற அந்த எம்எல்ஏக்கள் வாக்காளா்களுக்கு என்ன பதிலைக் கூறுவா்? கட்சி மாறி வாக்களித்தவா்கள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிலையில், கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களில் 4 பேருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!
ராணுவ வீரர்களுக்கு திலகமிட்டு ஹோலி பண்டிகையை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

இதுகுறித்து மாநில அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கட்சி மாறி வாக்களித்த சமாஜவாதி எம்எல்ஏக்களில் அபய் சிங் (கோசைகஞ்ச்), மனோஜ் குமாா் பாண்டே (உஞ்சஹா்), ராகேஷ் பிரதாப் சிங் (கெளரிகஞ்ச்) மற்றும் வினோத் சதுா்வேதி (கல்பி) ஆகியோருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.’ இதில், "அபய் சிங்குக்கு வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், மற்ற மூவருக்கும் சனிக்கிழமை பாதுகாப்பு அளிக்கப்பட்டது" என்று அந்த அதிகாரி கூறினார்.

‘ஒய்’ பிரிவு பாதுகாப்பின் ஒரு பகுதியாக, எம்எல்ஏக்களுக்கு 8 மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் பாதுகாப்பு அளிப்பா். இதில் 5 வீரா்கள் அவர்களது வீட்டுக்கும், மீதமுள்ளவர்கள் அவர்களுடன் செய்தபடி பாதுகாப்பு அளிப்பா்.

இந்த நால்வா் தவிர, பூஜா பால், ராகேஷ் பாண்டே, அசுதோஷ் மெளரியா ஆகிய 3 சமாஜவாதி எம்எல்ஏக்களும் மாநிலங்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததால், சமாஜவாதி கட்சி வேட்பாளர் அலோக் ரஞ்சன் தோல்வியை தழுவினார். மற்றொரு எம்எல்ஏவான மகாராஜி பிரஜாபதி வாக்களிக்கவில்லை. சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்பி ரித்தேஷ் பாண்டேவின் தந்தை ராகேஷ் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com