ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மதிமுக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும்,ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி (77)வியாழக்கிழமை அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர். பின்னர், அண்ணன் வைகோவுடன் இணைந்து பயணப்பட்டார்.

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
எம்பி சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை என்பது பொய்: வைகோ

ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com