புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
Published on
Updated on
1 min read

புனித வெள்ளியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளியையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் புனித வெள்ளி கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோல பாளையங்கோட்டையில் சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்திலும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தென்னிந்திய திருச்சபைக்குள்பட்ட பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயம் உள்ளிட்டவற்றில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இதில், திருப்பூா் குமாா் நகரில் உள்ள சிஎஸ்ஐ தூயபவுல் ஆலயம், குமரன் சாலையில் உள்ள கேத்தரின் தேவாலயம், சபாபதிபுரத்தில் உள்ள டிஇஎல்சி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனைகளில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

அதேபோல, தாராபுரம், பல்லடம், காங்கயம், அவிநாசி, ஊத்துக்குளி, உடுமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com