சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பெண் உள்பட இரண்டு பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, உணவகத்துக்கு சீல் வைத்து ஆட்சியர் நடவடிக்கை.
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு  'சீல்'

நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பெண் உள்பட இரண்டு பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சம்மந்தப்பட்ட உணவகத்துக்கு சீல் வைத்து ஆட்சியர் ச.உமா நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் கருணாநிதி என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் நாமக்கல் கொண்டிச்செட்டிபட்டியைச் சேர்ந்த சேர்ந்த பகவதி(20)என்ற கல்லூரி மாணவர் அந்த உணவகத்தில் ஏழு சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி உள்ளார். அவர் அங்கேயே உணவு அருந்தி உள்ளார். வாங்கிய பொட்டலங்களை வீட்டில் உள்ள தாய் நதியா(37) மற்றும் உறவினர் ஒருவருக்கும் வழங்கியுள்ளார். அதன்பிறகு எருமப்பட்டி தேவராயபுரம் சென்று தாத்தா சண்முகநாதன்(67) மற்றும் அங்கிருந்த உறவினர்கள் நான்கு பேருக்கு வழங்கியுள்ளார். இந்த உணவை சாப்பிட்டதில் நதியா மற்றும் சண்முகநாதன் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு  'சீல்'
விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

இதுகுறித்து தகவல் அறிந்து புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில் சம்மந்தப்பட்ட உணவகத்துக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ச.உமா மற்றும் உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களில் இருவர் மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இது தொடர்பாக, சிக்கன் ரைஸ் உணவை சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

உணவில் ஏதாவது கலப்படம் செய்யப்பட்டதா? என்பது குறித்து உணவக உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் கல்லூரி மாணவர் பகவதியிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com