கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

கொல்கத்தாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொல்கத்தா: கொல்கத்தாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூ டவுன் பகுதியில் ஐந்து தளம் கொண்ட கட்டடத்தின் நான்காவது தளத்தில் ஆடை உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் இதர வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் நான்காவது தளத்தில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின.

கோப்புப்படம்
சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் இதர பகுதிகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டுவர பேராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் இல்லை. மேலும் தீ விபத்தில் காயமோ அல்லது உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணமோ, பொருள்கள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com