கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை
பிரிங்கா காந்தி
பிரிங்கா காந்தி
Updated on
1 min read

70 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று கேட்கும் பாஜகவினரே, கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரிங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத்தின் பனஸ்கந்தா மக்களவைத் தொகுதிக்குட்பட்ட லகானியில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ”எனது சகோதரரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியை இளவரசர் எனக் குறிப்பிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சாடியவர், அரண்மனையில் மன்னாதி மன்னைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்” எனக் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

“என் சகோதரனை இளவரசர் என்று அழைக்கிறார்கள். இந்த இளவரசர் தான்(ராகுல் காந்தி) கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்து மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்... அவர் எனது சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்ன என்று கேட்டறிந்தார்..." என்று பிரியங்கா கூறினார்.

மேலும், “மறுபுறம் அரண்மனையில் வசிக்கும் உங்கள் பேரரசர் பிரதமர் நரேந்திர மோடியால், விவசாயிகள் மற்றும் பெண்கள் சந்தித்து வரும் கஷ்டங்களை பிரச்னைகளை எப்படி புரிந்து கொள்ள முடியும்?

மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. சுற்றி இருப்பவர்கள் அவர்களை கண்டு பயப்படுகிறார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் சொல்வதில்லை. யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரலும் ஒடுக்கப்படுகிறது.

70 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று கேட்பவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை என கேள்வி எழுப்பிய பிரிங்கா காந்தி, ஐஐஎம், ஐஐடி, எச்ஏஎள், ஏய்ம்ஸ், பெல், பக்ரா நங்கல் போன்ற பெரிய அணைகள், பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், செயில், என்டிபிசி, ஓன்ஜிசி, பிபிசிஎல், கோல் இந்தியா, இஸ்ரோ, டிஆர்டிஓ என தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தை காங்கிரஸ் உருவாக்கியது.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை? என்றார் பிரியங்கா காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com