வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நீர்த் திறக்கப்பட்டுள்ளதால், 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நீர்த் திறக்கப்பட்டுள்ளதால், 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5 நாள்களுக்கு மொத்தம் 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

இந்த நீர்த் திறப்பு மூலம் பல ஆயிரக்காண நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

எனவே வைகை ஆற்று கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வைகை ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com