பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் உண்மை வெளிவரும்: சித்தராமையா நம்பிக்கை

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் காவல்துறை சட்டப்பூர்வ விசாரணை நடத்தும் என்றும், இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை
கோப்புப் படம்
கோப்புப் படம்

மைசூரு: பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் காவல்துறை சட்டப்பூர்வ விசாரணை நடத்தும் என்றும், இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த வழக்கில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க ஆளுநரிடம் குமாரசாமி கோரிக்கை வைத்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, பிரஜ்வல் ரேவண்ணா வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை.

முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் ஒரு வழக்காவது சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கிறதா? முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது டி.கே.ரவி வழக்கு, லாட்டரி வழக்கு, அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் மீதான குற்றச்சாட்டு, பரேஷ் மேஸ்தா வழக்குகள் சிபிஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது," என்று முதல்வர் கூறினார். இந்த வழக்குகளில் யாராவது தண்டிக்கப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.

கோப்புப் படம்
அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

கடந்த காலங்களில் சிபிஐ அமைப்பை, ஊழல் புலனாய்வு அமைப்பு என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவகவுடா , திருடா்களைக் காப்பாற்றும் அமைப்பு என்று சிபிஐ அமைப்பை விமா்சித்திருந்தாா். தற்போது சிபிஐயை நம்புகிறார்களா? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், எனக்கு சிபிஐ மீது நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் எங்கள் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், அனைத்து குற்ற வழக்குகளையும் விசாரிக்கும் காவல்துறையை நாம் நம்ப வேண்டாமா? என முதல்வர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையில் நானோ, துணை முதல்வா் டி.கே.சிவகுமாரோ தலையிடுவதில்லை என்று கூறிய முதல்வர், உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

ரேவண்ணா கைது விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர், “தன் மீதான குற்றச்சாட்டில் எந்தத் தவறும் இல்லை என்றால், அவர் ஏன் முன்ஜாமீன் கோரினார்?” என்றார். முன்ஜாமீன் மனுவை ஏன் நீதிமன்றம் நிராகரித்தது என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com