ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

வாக்குச் சாவடிக்கு வந்த முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்த்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா.
ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் கோஷாமஹாலில் வசிப்பவர்கள் அல்ல என்றும், ஆனால் அவர்களின் பெயர்கள் ரங்காரெட்டி பட்டியலில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட பாஜக வேட்பாளர் மாதவி லதா, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்காளர் அடையாள அட்டையை ஒப்பிட்டு சரிபார்த்தார்.

மேலும், ஹைதராபாத் தொகுதிக்குள்பட்ட ஆசம்பூரில் உள்ள வாக்குச்சாவடி எண் 122-ஐ பார்வையிட்ட மாதவி லதா, வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்

மாதவி லதா கூறுகையில், "காவல் துறையினர் மிகவும் மந்தமாக இருப்பதுபோல் தோன்றுகிறது, அவர்கள் சுறுசுறுப்பாக இல்லை. அவர்கள் எதையும் சரிபார்க்கவில்லை. மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் இங்கு வருகிறார்கள், ஆனால் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் கோஷாமஹாலில் வசிப்பவர்கள், ஆனால் அவர்களின் பெயர்கள் ரங்காரெட்டி பட்டியலில் உள்ளன" என்று கூறினார்.

பாஜக வேட்பாளர் மாதவி லதா வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்க்கும் விடியோ குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "நான் (விடியோவை) பார்க்கவில்லை, ஆனால் பாஜக முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்த முயற்சிக்கிறது, ஆனால் இந்த பிரச்னைகள் அனைத்தும் அசாதுதீன் ஒவைசிக்கு உதவும். இதனால் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை" என்றார்.

ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் வேட்பாளர் முகமது வலியுல்லா சமீர், பிஆர்எஸ் வேட்பாளர் கடம் ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆகியோரை எதிர்த்து மாதவி போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com