வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

வாக்காளரைத் தாக்கிய எம்எல்ஏ: ஆந்திரத்தில் எம்எல்ஏ வாக்காளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலியில் தேர்தலில் போட்டியிடும் எல்எல்ஏ சிவகுமார் வாக்காளர் ஒருவரது கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குண்டூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த தெனாலி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ இந்தமுறையும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில், வாக்குச் சாவடியில் வாக்களிக்கக் காத்திருந்த வாக்காளர் ஒருவர் வரிசையினை மதிக்காமல் முந்திச் செல்ல முயன்ற சட்டமன்ற உறுப்பினரை வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ சிவக்குமார் வாக்காளரை அறைந்துள்ளார். வாக்காளரும் பதிலுக்கு எம்எல்ஏவை தாக்கியுள்ளார்.

போலிசாரின் கூற்றுப்படி, அடிப்பதற்கு முன்பு எம்.எல்.ஏ-வுக்கும் வாக்காளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்காளருக்கு பதிலடி கொடுத்த பிறகு, எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் வாக்காளர் மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடங்கினர், காவல்துறையினரும் பிற வாக்காளர்களும் தாக்குதலைத் தடுக்கும் வரை வன்முறை ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com