தொடரும் சோகம்.. நாய் கடித்ததில் 5 மாதக் குழந்தை பலி

தெலங்கானாவில் தெருநாயால் தாக்கப்பட்ட 5 மாதக் குழந்தை பலி!
தொடரும் சோகம்.. நாய் கடித்ததில் 5 மாதக் குழந்தை பலி

செல்லப்பிராணிகளினால், குறிப்பாக நாய்கள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னையில், 5 வயது சிறுமி, இரு வளர்ப்பு நாய்களினால் தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மாநகராட்சி நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது.

தெலங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் ஐந்து மாத குழந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தெரு நாயால் தாக்கப்பட்டு, பின்னர் குழந்தை இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உள்ளூர் குடியிருப்பாளரால் பரமாரிக்கப்பட்டு வந்த தெருநாய், குழந்தையின் தாயார் வேலைக்குச் சென்றநேரம், குழந்தை தூங்கிக் கொண்டிருந்த வீட்டிற்குள் நுழைந்து, குழந்தையை தாக்கி, கொடூரமாக காயப்படுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

நாய், குழந்தையின் தொண்டையில் பலமாகக் கடித்திருப்பதகாவும், குழந்தையின் உடல் பாகங்களை தின்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com