மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் இன்று தனது 40-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்!
மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், நியூயார்க்கில் உள்ள ஒயிட் பிளைன்ஸில், மே மாதம் 14-ஆம் நாள், 1984-இல் பிறந்தார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்குள் மற்ற மாணவர்களுடன் தொடர்புகொள்ள மார்க் ஆரம்பிக்க நினைத்ததுதான் ஃபேஸ்புக். ஆனால், அது ஒரு முழுக்க முழுக்க கல்லூரிக்குள் தொடர்புகொள்ளவும் உரையாடவும் மட்டுமே மார்க்கின் மனதில் இருந்தது.

ஏஓஎல், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்பு வந்தபோதும் அதை மறுத்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இணைந்தவர். அந்தப் படிப்பையும் ஃபேஸ்புக்கை மென்மேலும் உயர்த்துவதற்காக தவிர்த்தார்.

பிப்ரவரி 4, 2004-இல் மார்க் ஜூக்கர்பெர்க் அவரது ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார்

சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை அடையாளம் காண்பதில் மார்க்-க்கு பார்வைக்கோளாறு இருப்பதாலும் அவரால் நீல நிறத்தை எளிதாக அடையாளம் காண முடியும் என்பதாலுமே ஃபேஸ்புக் பக்கம் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டது.

டிசம்பர் 2, 2009 அன்று ஃபேஸ்புக்கில் 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மார்க் ஜூக்கர்பெர்க், பிரிசில்லா சான் எனும் அமெரிக்கரை மே 19, 2012-இல் மணந்தார். இவர்களுக்கு மாக்ஸிமா, ஆகஸ்ட் மற்றும் ஆரேலியா என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போதைய கணிப்பின்படி, மார்க் ஜூக்கர்பெர்க் 177 பில்லியன் டாலர் ($177B) சொத்துமதிப்பினைக் கொண்டுள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் பட்டியலில் உள்ளார்.

தன் 19-ஆவது வயதில் ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்கிய மார்க் ஜூக்கர்பெர்க் தான், இன்று 3.5 பில்லியன் மக்கள் வாழும் ஃபேஸ்புக் எனும் உலகின் முடிசூடா மன்னன். எல்லைகளைக் கடந்து இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே செல்கிறது மார்க்கின் விர்ச்சுவல் சாம்ராஜ்யம்!

இந்த நிலையில்தான், மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் இன்று தனது 40-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com