உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உத்தரப் பிரதேசத்தில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

2 அரசுப் பள்ளிகள் உள்பட 7 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையடுத்து போலீஸ் விசாரணையில் அது புரளி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் 5 தனியார் பள்ளிகள் மற்றும் 2 அரசு பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹனுமந்த் விஹாரில் உள்ள குல்மோகர் விஹார் பப்ளிக் பள்ளி, குஜைனியில் உள்ள கேடிஎம்ஏ பள்ளி, கௌஷல்புரியில் உள்ள சனாதன் தர்மம் கல்வி மையம், சிங்பூரில் உள்ள சிந்தால் பள்ளி, சிவில் லைன்ஸ் கேந்திரிய வித்யாலயா கான்ட்டில் உள்ள வீரேந்திர ஸ்வரூப் பள்ளி, அர்மாபூர் தோட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

முதல்கட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையர் ஹரிஷ் சந்திரா கூறுகையில்,"செவ்வாய்க்கிழமையன்று போலீஸாரிடம் மிரட்டல் புகார் அளித்தனர். சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த மாத தொடக்கத்தில் லக்னெள, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் தில்லி-என்சிஆர் பள்ளிகளிலும் இதேபோன்ற போலியான மிரட்டல்கள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com