குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

விழுப்புரத்தில் குடிநீர் கிணற்றில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக புகார்!
Maha: Two men drown after car falls into well in Jalna
Maha: Two men drown after car falls into well in Jalna
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்படும் குடிநீர் கிணற்றில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற குடிநீர் கிணற்றில், இவ்வாறான நிகழ்வு நடந்துள்ள நிலையில். புகாரளிக்கப்பட்டு, கஞ்சனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கிணற்றினை சோதித்துப் பார்த்தபின், தேனடை என தெரிய வந்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் உபயோகிக்கும் பெரிய மேல்நிலைத்தொட்டி ஒன்றுள்ளது. இந்த தொட்டியிலிருந்து, அந்தக் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.தொட்டியில் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டிருந்தன. மேலும் தண்ணீர் நாளுக்குநாள் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து சிலர் தொட்டியில் ஏதேனும் உயிரினம் இறந்து கிடக்கிறதா என பார்க்க தொட்டி மீது ஏறியபோது,அதில் யாரோ மனித கழிவுகளை போட்டிருப்பது தெரியவந்து. அதிர்ச்சியளித்தது. இதுகுறித்து, புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம் முறையிடப்பட்டு, பின்னர் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவுடன் வந்த ஆட்சியர் கவிதா ராமு அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். இவ்விசாரணை இன்றளவிலும் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com