
ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா இன்று பத்திரிகையாளர்களுடன் பேசுகையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் அமலாக்கத்துறை சார்பில் போதைப்பொருள்கள், மதுபானங்கள், விலைமதிப்புள்ள உலோகங்கள், இலவசப் பொருள்கள் மற்றும் பணமாக என ரூ.1,106 கோடி மதிப்பிலானப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக் கூறியுள்ளார்.
அந்தப் பொருள்களுள் ரூ. 202.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், ரூ. 47 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.70 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் பணமாக ரூ.42 கோடி வரை உள்ளன.
அதுதவிர, ரூ. 743.97 கோடி மதிப்புள்ள மற்ற பொருள்களும், ரூ. 90 லட்சம் மதிப்புள்ள இலவசப் பொருள்களும், கடந்த மார்ச் 1 முதல் பல்வேறு அரசுத் துறையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 16-ல் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அரசுத் துறைகளால் கைபற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.1000 கோடியைத் தாண்டும்.
கடந்த மார்ச் 1 முதல் தற்போது வரை, சந்தேகதிற்குரியப் பொருட்கள் மற்றும் பணமாக ரூ. 40 கோடி வரை தனித்தனியே 9 மாவட்டங்களில் பிடிபட்டுள்ளன. அதில் அதிகமாக சிரோஹி மாவட்டத்தில் ரூ. 68.77 கோடியும், ஜெய்ப்பூரில் மற்றும் ஜுன்ஜுனோவில் முறையே 61.05 கோடியும், 52.46 கோடியும் கைபற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமானப் பொருள்களைக் கொண்டு செல்வதைத் தடுப்பதற்கு மாநிலக் காவல்துறை, போதைப்பொருள் தடுப்புத்துறை, வருமான வரித்துறை ஆகியவை முக்கியப் பங்காற்றி வருகின்றன என்று குப்தா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.