

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் நடந்துக் கொண்டிருக்கும்வேளையில், சிஎஸ்கே நிர்வாகம், அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கத்தில் தன் ரசிகர்களுக்காக நன்றி தெரிவித்துள்ளது.
ஆர்சிபி அணியுடன் மோதவிருக்கும் சிஎஸ்கே, தன் வலைத்தளப்பக்கத்தில் ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துள்ளது. சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கத்தில், நுழைந்தவுடன், பெயரைப் பதிவிடக் கேட்கும். பெயரினைப் பதிந்தவுடன், தங்களின் பெயருடன் சிஎஸ்கே அணியினரின் குழுப் புகைப்படம் மற்றும் அவர்களின் கையெழுத்துகளுடன், தங்களின் பெயரும் அச்சடித்து வரும் வகையில் வலைத்தளப் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
”உங்களின் பேராதரவு மட்டுமே எங்களின் பயணத்தின் இதயத்துடிப்பாக இருந்து வருகிறது. உங்களிடமிருந்து பெறப்படும் ஆரவாரமும் விசிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை” எனும் வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.