ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: எங்கு? எப்போது?

நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: எங்கு? எப்போது?
Published on
Updated on
1 min read

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, மண்டலம்-9(பகுதி), மண்டலம்-13(பகுதி),மண்டலம்-14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: எங்கு? எப்போது?
மருத்துவத் துறையில் புதிய மைல்கல்! மனநலம், நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் புதிய கட்டடம்

எனவே, மே 24 முதல் ஜூன் 2 வரை (பத்து நாள்கள்) பொதுமக்கள் குடிநீர் வினியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் இடங்கள்

பகுதி-9 தேனாம்பேட்டை: மந்தைவெளி, மைலாப்பூர், ராஜ அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை

பகுதி-13 அடையாறு: மந்தைவெளி, பெசன்ட் நகர், மடிவின்கரை, பேபி நகர், தந்தை பெரியார் நகர், கருணாநிதி நகர், கலாஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளூவர நகர், ஏஜிஎஸ் காலனி,

பகுதி-14 பெருங்குடி: கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், காவேரி நகர், திருமலை நகர், பள்ளிகரணை, மடிப்பாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், காமாட்சி காலணி, ஜல்லடியம்பேட்டை

பகுதி-15 சோழிங்கநல்லூர்: நீலாங்கரை, சரஸ்வதி நகர்,ஓக்கியம்-துரைபாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், உத்தண்டி பணையூர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி.

உதவி எண்கள்

தாம்பரம் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் - 94429-76905, செயற்பொறியாளர்-82488-88577

பொறியாளர்

தேனாம்பேட்டை(பகுதி) - 81449-30909; அடையார்(பகுதி) 81499-30913; பெருங்குடி - 81449-30914;சோழிங்கநல்லூர் - 81449-30915

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com