தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனையாகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில்,கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது
டெம்போவில் ராகுல் காந்தி!

இந்த நிலையில், திங்கள்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.55,200-க்கும்,

செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880-க்கும் விற்பனையானது.புதன்கிழமை செவ்வாயக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையானது.

இந்த நிலையில்,வியாழக்கிழமை அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.880 குறைந்து விற்பனையாகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,760-க்கும், பவுனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000-க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்து ரூ.97-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,300 குறைந்து ரூ.97,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com