உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆஸ்கர் நூலகத்தில் பார்க்கிங் திரைக்கதை!

பார்க்கிங் திரைப்படத்துக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Published On :

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் (2018) படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளார்.

இறுதியாக, ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இதில், ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. மேலும், இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பார்க்கிங் படத்துக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதையை தனது நூலகத்தில் வைப்பதற்காக ஆஸ்கர் அகாதெமி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், "ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடிப்போகும்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.