சரோஜ் கோயங்கா காலமானார்: எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்கா மருமகள்

எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் மறைந்த ராம்நாத் கோயங்காவின் மருமகள் சரோஜ் கோயங்கா (94), சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
சரோஜ் கோயங்கா (கோப்புப்படம்)
சரோஜ் கோயங்கா (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

எக்ஸ்பிரஸ் குழும நிறுவனரும் துணிச்சலான இந்திய இதழியல் முன்னோடியுமான ராம்நாத் கோயங்காவின் ஒரே மகனான மறைந்த பகவன் தாஸ் கோயங்காவின் மனைவி சரோஜ் கோயங்கா (94), சென்னையில் வெள்ளிக்கிழமை பகல் 11.30 மணியளவில் காலமானார்.

மறைந்த சரோஜ் கோயங்கா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியாவின் அத்தையுமாவார்.

புகழ்பெற்ற வணிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான மறைந்த ஷ்ரேயான்ஸ் பிரசாத் ஜெயினின் மகளாக, 1929 ஆகஸ்ட் 31-ல் சரோஜ் கோயங்கா பிறந்தார்.

எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் இயக்குநராக இருந்தவர் சரோஜ் கோயங்கா. அண்ணா சாலையிலுள்ள சென்னையின் புகழ்பெற்ற எக்ஸ்பிரஸ் மால் (எக்ஸ்பிரஸ் அவென்யூ)- ஐ இந்த நிறுவனம்தான் உருவாக்கியது; இ ரெசிடென்சஸ், இ ஹோட்டல் மற்றும் இஏ சேம்பர்ஸ் போன்ற பிற வணிகத் திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.

எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) லிமிடெட் நிர்வாக இயக்குநராகவும் இவர் இருந்திருக்கிறார்.

பெருங்கொடையாளரான சரோஜ் கோயங்கா, 2015 டிசம்பரில் சென்னையில் முன்னெப்போதுமில்லாத வகையில் வெள்ளம் பாதித்தபோது அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியது உள்பட ஏராளமான நல்ல பணிகளுக்கு நன்கொடைகள் வழங்கிவந்தவர்.

தற்போது மாற்றுத் திறனாளிகளைப் பராமரிக்கும் சுவாமி தயானந்த க்ருபா இல்லம் இருக்கும் 10 ஏக்கர் இடத்தை 1998-ல் நன்கொடையாக அவர் வழங்கினார்.

மறைந்த சரோஜ் கோயங்காவுக்கு ஆரத்தி அகர்வால், ரித்து கோயங்கா மற்றும் கவிதா சிங்கானியா ஆகிய மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com