6-ம் கட்டத் தேர்தலில் 59.06% வாக்குப்பதிவு!

 6-ம் கட்டத் தேர்தலில் 59.06% வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு தில்லி, ஹரியானா உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

வாக்குப்பதிவின் முடிவில் இரவு 7.45 வரை மொத்தமாக 59.06 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்றைய வாக்குப்பதிவில் மேற்கு வங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.

வாக்குப்பதிவின் முடிவில் மேற்கு வங்கத்தில் 78.19%, பீகாரில் 53.30%, ஹரியானாவில் 58.37%, ஜம்மு காஷ்மீரில் 52.28%, ஜார்க்கண்டில் 62.74%,, தில்லியில் 54.48 %, ஒடிசாவில் 60.07%, உத்தர பிரதேசத்தில் 54.03% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இன்றுடன் 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன.

கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1 அன்று நடைபெறுகிறது. மேலும், தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியாக இருப்பதால் நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com