ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக் காலம் நீட்டிப்பு

ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டித்து அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே
ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே

புதுதில்லி: ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டித்து அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் இன்ஜினியர்ஸ் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ராணுவத்தின் 29 ஆவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார்.

ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே
தில்லியில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர் கைது!

இவரது பதவிக் காலம் மே 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு ஜூன் 30 வரை ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைமை தளபதி ஜி.ஜி.பீவூருக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு அளித்தது இந்திரா காந்தி அரசு. அதன்பின்னர் தற்போது மனோஜ் பாண்டே பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாண்டேவுக்குப் பின்னர் ராணுவத் தலைமை தளபதியாகும் வாய்ப்புள்ள இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகளும் ஜூன் மாதத்தில் பணி ஓய்வு பெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com