ஃபஹத் ஃபாசிலுக்கு இப்படியொரு நோயா?

பிரபல நடிகர் ஃபஹத் ஃபாசில் தனக்கு இருக்கும் நோய் பாதிப்பு குறித்து மனம் திறந்துள்ளார்.
ஃபஹத் ஃபாசில்
ஃபஹத் ஃபாசில்
Published on
Updated on
2 min read

தென்னிந்தியாவின் பிரபல நடிகரான ஃபஹத் ஃபாசில், தனக்கு கவனக் குறைவு / மிகைச் செயல்பாட்டுக் குறைபாட்டுப் பிரச்சினை (ஏ.டி.ஹெச்.டி. - அட்டென்ஷன் டெஃபிசிட் / ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் - Attention deficit / Hyperactivity disorder) இருப்பதாகவும், தாம் அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரளத்திலுள்ள கொத்தமங்கலம் என்ற இடத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான தனியார் பள்ளியொன்றைத் திறந்துவைத்த அவர், தன்னுடைய இந்தக் குறைபாடு பற்றிப் பேசினார்.

மேலும், மருத்துவரிடம் இதுதொடர்பாக விசாரித்த போது சிறுவயதிலேயே கவனித்து தகுந்த மருத்துவ உதவிகள் வழங்கினால் இதனை குணப்படுத்த முடியும் என்று அவர் கூறியதாகவும், 41 வயதில் ஏடிஹெச்டி குறைபாட்டை எளிதாக குணப்படுத்த முடியுமா என்று கேட்டறிந்ததாகவும், தற்போது அதற்கான மருத்துவ சிகிச்சையில் தான் இருப்பதாகவும் கூறினார்.

ஃபஹத் ஃபாசில்
காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு!

இதன் மூலம் படைப்பாற்றல் அதிகரிக்கும் என்றும், மற்றவர்கள்போல நேர்க்கோட்டில் சிந்திக்கும் திறன் இல்லையென்றாலும் கலை மற்றும் பிற துறைகளில் ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சாதித்துள்ளனர் என்றும் இந்த குறைபாட்டின் சாதகமான அம்சங்களையும் ஃபஹத் குறிப்பிட்டார்.

ஆவேஷம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில்
ஆவேஷம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில்

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ”ஏடிஹெச்டி என்பது கவனக்குறைவால் ஏற்படும் மிகை இயக்க (ஹைபர் ஆக்ட்டிவ்) கோளாறு என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவனக்குறைவு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமை, அமைதியான சூழலில் உட்கார முடியாதது, அதிகமாக பேசுவது, வேலையில் கவனக்குறைவு, மற்றவர்கள் சொல்வதை கவனிக்க முடியாமை போன்ற பிரச்னைகள் இருக்கும்.

இதனால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் பெரும்பாலும் ஞாபக மறதிக்காரர்களாக இருப்பார்கள். தினசரி பயன்படுத்தும் விஷயங்கள் முதல் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் வரை அனைத்தையும் மறந்துவிடுவார்கள். அவர்களுக்கென ஒரு உலகில் வாழ்வார்கள். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை போன்ற திடீர் மனநிலை மாற்றம் (மூட் ஸ்விங்) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மூளையிலுள்ள நரம்புக்கடத்திகளின் (Neurotransmitters) செயல்பாடு குறைவின் காரணமாக ஏ.டி.ஹெச்.டி. ஏற்படுகிறது எனக் கூறப்பட்டாலும், அவை ஏன் மெதுவாகச் செயல்படுகின்றன என்பது இன்னும் கண்டறியப்படாமல் இருக்கிறது” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஃபஹத் ஃபாசில்
குட் பேட் அக்லி படப்பிடிப்பில் அஜித்!

மேலும், ஏடிஹெச்டி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகளவில் இருக்கும் என்றும், கவனச்சிதறலை சரிப்படுத்தினால் அவர்களால் பெரிதாக சாதிக்கமுடியும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நோய் குறித்தான ஃபஹத் ஃபாசிலின் வெளிப்படையான பேச்சு ஏடிஹெச்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரபல நீச்சல் வீரரான மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஹாலிவுட் நடிகர்கள் வில் ஸ்மித், ஜிம் கேரி, எம்மா வாட்சன், அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் போன்றவர்கள் `ஏ.டி.ஹெச்.டி' குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com