இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? என தெரியாமல் ஐபிஎல் ரசிகர்கள் அவதிக்குள்ளாகினர்.
ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் போட்டியின் 17வது சீசன் நிறைவடைந்துவிட்டது. 3வது முறையாக சாம்பியன் கோப்பை வென்று, வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இந்த 17வது ஐபிஎல் சீசன் முழுவதுமாகவே பல சாதனைகள் படைக்கப்பட்டு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக மாறியிருந்தது.

ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் கடந்த இரண்டு மாதங்களாக, கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வேலைகளை எல்லாம் விரைவாக முடித்துக்கொண்டு இரவு 7.30 மணிக்கு தொலைக்காட்சி அல்லது செல்போன் முன்பு அமர்ந்துவிடுவார்கள். யார் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், கிரிக்கெட் போட்டியை மிகவும் ரசித்து, சில சூப்பர் ஓவர்கள், அடிதடி சிக்சர்கள், மறக்க முடியாத அவுட்களைப் பற்றி பேசி, ஸ்டேட்டஸ் போட்டு, சில ஏற்றுக்கொள்ள முடியாத அவுட்களால் துயரத்தில் வாடி என தங்களது நாள்களைக் கழித்தனர்.

இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில், ஒருவழியாக ஐபிஎல் முடிந்தே விட்டது. ஐபிஎல் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிந்த நிலையில், திங்கள்கிழமை இரவு என்ன செய்வது என்று தெரியாமல் கை உதறலோடு அவதிக்குள்ளானார்கள் பல்வேறு பகுதி இளைஞர்கள்.

இத்தனை காலம் ஐபிஎல் மீம்ஸ்களை பார்த்து பரவசமடைந்தவர்களைப் பற்றியும் நேற்று சில மீம்ஸ்கள் வெளியாகியிருந்தது. அதனையும் கிரிக்கெட் ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர்.

சில இளைஞர்கள் ஒன்றாக அமைதியாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் போட்டு அதன் கீழே ஐபிஎல் ரசிகர்களின் இன்றைய நிலைமை என்று கீழே வாசகம் எழுதப்பட்ட மீம்ஸை பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

ஐபிஎல் சுவாரஸ்யம்.. ஐபிஎல் போட்டியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் குவாலிஃபர் 1 ஆட்டத்தில் வெல்லும் அணியே இறுதியில் சாம்பியனாகியிருக்கிறது. அதிலும் 2021தவிர்த்து இதர 6 ஆண்டுகளுமே குவாலிஃபயர் 1இல் மோதிக் கொண்ட அணிகளே இறுதி ஆட்டத்தில் மீண்டும் சந்தித்துக்கொண்டன.

ஐபிஎல் போட்டியில் மும்பை, சென்னைக்கு அடுத்து அதிக முறை (3) கோப்பை வென்ற அணியாக உருவெடுத்துள்ளது கொல்கத்தா அணி என்பது போன்ற சுவாரஸ்ய தகவல்களையும், ஹைலைட்ஸ்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து தங்களது நேரத்தைக் கழித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com