
திருச்சியில் ஆவின் பால் எடுத்துச் செல்லும் வாடகை வாகன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திருச்சியில் ஆவின் பால் எடுத்துச் செல்லும் வாடகை வாகனங்களுக்கு 4 மாதங்களாக வாடகை வழங்ககாததால் புதன்கிழமை காலை கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணை முன்பாக ஆவின் பால் எடுத்துச் செல்லும் வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சியில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கர்களுடன் ஆவின் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதி வழங்கப்படும் என ஆவின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். புதன்கிழமை மாலை முதல் வழக்கம்போல் ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.