சுந்தரி தொடர் நடிகருடன் இணையும் கண்மணி மனோகரன்!

சுந்தரி தொடர் நடிகருடன் இணையும் கண்மணி மனோகரன்!

நடிகை கண்மணி மனோகரனின் புதிய தொடர் அறிவிப்பு.
Published on

புதிய தொடரொன்றில் சுந்தரி தொடர் நடிகர் ஜிஷ்ணுவுடன் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன். பின்னர் இத்தொடரிலிருந்து திடீரென்று விலகினார்.

தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ராகவி எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரொன்றில் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கிறார். இவருடன் இத்தொடரில் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு, தேஜஷ்வினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வாணி ராணி தொடரில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அருண்குமார் - நீலிமா ஜோடி இத்தொடரில் பிரதானப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராகவி தொடரின் முன்னோட்டக் காட்சி மற்றும் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com