ரூ.2,858 கோடி செலவில் உலகளாவிய மையம்: சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம்
சென்னை: ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி செலவில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி புகழ்பெற்ற கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான செயின்ட் கோபைன் விண்ணப்பித்துள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் சுமார் 127 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள உலகளாவிய மையத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆலையின் மூலம் சுமார் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரூ.2,858 கோடி செலவில் அமையவுள்ள உலகளாவிய மையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த உலகளாவிய மையத்தில் கண்ணாடி கம்பளி, ஜிப்சம் பிளாஸ்டர்போர்டு, பிளாஸ்டர்கள், ஃப்ளோட் கிளாஸ், சோலார் கிளாஸ், பசைகள், மோட்டார் ஆகியவைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
உலகளாவிய மையத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.