உதகை மலை ரயில் சேவை இன்று(நவ. 3) ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?
இதனால், உதகை-குன்னூா் இடையே மலை ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் பாதையில் விழுந்த பாறைகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணியில் ரயில்வே பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர்.