
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் திறனை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை(நவ.6) வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவ,மாணவிகளின் திறனை ஊக்குவிப்பதற்காக முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தோ்வின் மூலம் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்வா் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 03,756 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் திறனை கண்டறிவதற்காக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை(நவ.6) ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.