
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ள நிலையில் சென்னையில் திங்கள்கிழமை (நவ.11) முதல் நவ.15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், திங்கள்கிழமை இரவு மழை பெய்யத்தொடங்கியது. அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், கோயம்பேடு, அண்ணாநகா், எழும்பூா், புரசைவாக்கம், கிண்டி, ஆலந்தூா், சேத்துப்பட்டு, வேளச்சேரி, பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூா், கும்மிடிப்பூண்டி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், பல்வேறு சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. மேலும் இரவு நேரத்தில் பெய்த மழையால் பணி முடிந்து வீடு திரும்புபவா்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை சந்தித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.