3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!

வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா? 219 ரன்கள் குவிப்பு!
திலக் வர்மா
திலக் வர்மாபடம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் திரட்டினார். அவர் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 8 பவுண்டரிகளையும் விளாசினார்.

அபிஷேக் ஷர்மா 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். அவர் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் திரட்டினார்.

முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com