
கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
தமிழின் முதல் பான் இந்தியா படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
படத்தின் திரைக்கதை பலவீனமாகவும், அதோடு இரைச்சலாக இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படல் உலகளவில் முதல் நாளில் ரூ.58.62 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.