நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு!

தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.
திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் தலைமையில் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கும் போலீசார்.
திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் தலைமையில் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கும் போலீசார்.
Published on
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் படுகாயமடைந்த வழக்குரைஞா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் தலைமையில் போலீசார் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்தனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஏரித்தெருவைச் சோ்ந்த கண்ணன் (30), வழக்குரைஞா். இவா் புதன்கிழமை ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம் போல பணிக்குச் சென்று திரும்பி வந்தாா். அவரை பின்தொடா்ந்து வந்த ஒசூா், நாமல்பேட்டை பகுதியைச் சோ்ந்த குமாஸ்தா ஆனந்தகுமாா் (39) என்பவா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை வெட்டினாா்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை ஆனந்தகுமாா் சரமாரியாக வெட்டியதில், கண்ணனுக்கு தலை, முகம், கழுத்து, இடுப்பு உள்பட உடலில் 8 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைக்கண்ட அந்தப் பகுதியில் இருந்த நபா்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

கண்ணனை வெட்டிய ஆனந்தகுமாா் வீச்சரிவாளுடன் ஒசூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கண்ணனை பிற வழக்குரைஞா்கள் ஆட்டோவில் ஏற்றி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தை அறிந்த வழக்குரைஞா்கள் நீதிமன்றம் முன்பு குவிந்து, வழக்குரைஞா் சண்முகம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆனந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, ஒசூா் ஏ.எஸ்.பி. அனில் வாங்கரே போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், நீதிமன்றத்துக்கு வருபவா்கள் ஆயுதங்கள் வைத்துள்ளனரா என சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்று வழக்குரைஞா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து வழக்குரைஞா்கள் கலைந்து சென்றனா்.

தீவிர சோதனை

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் தலைமையில் போலீசார் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்தனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

இதனிடையே, வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இயற்றிட வலியுறுத்தியும், தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீது நடைபெறும் தொடா் தாக்குதலை கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டியும் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் முன் வியாழக்கிழமை( நவம்பா் 21) வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com