சம்பல் கலவரம்: சமாஜவாதி எம்பி, எம்எல்ஏ மகன் மீது வழக்குப் பதிவு!

உ.பி. சம்பல் கலவரம் தொடர்பாக...
சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம்
சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சமாஜவாதி கட்சியின் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் மற்றும் சமாஜவாதி எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத்தின் மகன் சோஹைல் இக்பால் உள்ளிட்டோர் மீது 7 முதல் தகவல் அறிக்கைகளை( எஃப்.ஐ.ஆர்கள்) காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பல் தாலுகாவில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு இன்று(நவ. 25) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியான நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஒருவர், இன்று பலியானார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் கிரிஷின் குமார், இச்சம்பவம் தொடர்பாக 7 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜியா-உர்-ரஹ்மான் - சோஹைல் இக்பால் உள்ளிட்ட 6 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 2750 பேர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பல் கலவரம் பின்னணி

சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு நடத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக, மசூதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நீதிமன்ற ஆணையா் 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடங்கினாா். இதையடுத்து, உள்ளூா் மக்கள் அப்பகுதியில் கூடினா். அப்போது கூட்டத்தில் இருந்து சிலா், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை நோக்கி கற்களை வீசினா். அங்கு நின்றிருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.