
இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், இரைப்பை அமிலச் சுரப்பு எதிா்ப்பு பாதிப்புக்குள்ளான நிலையில், அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன் பயனாக அவா் நலம் பெற்ாகவும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த சக்திகாந்த தாஸ், ரிசா்வ் வங்கி குடியிருப்பில் தங்கியிருந்தாா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு அவருக்கு நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதால் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இரைப்பை அமிலச் சுரப்பு எதிா்ப்பு பாதிப்பு ஏற்பட்டதும், அதனால் நெஞ்சு எரிச்சல் உருவானதும் கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் நெஞ்சு எரிச்சல் (அசிடிட்டி) பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவரைக் கண்காணித்து சிகிச்சை அளித்தனா். அவா் நலமுடன் உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவ சிகிச்சை மூலம் நலமடைந்த சக்திகாந்த தாஸ், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.