தற்போதைய செய்திகள்
தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்
அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந் த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை நீடித்து வந்தது, புதன்கிழமை மாலை முதல் மழை சற்று ஓய்ந்த போதிலும் வழக்கத்தை விட பலமான தரைக்காற்றுடன் அவ்வப்போது லேசான மழைப்பொழிவு இருந்து வருகிறது.
கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் வழக்கமாக படகுகள் நிறுத்துமிடத்தில் கடல் நீர் உள்புகுந்தது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.