மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை 5,110 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை வினாடிக்கு 4,427 கன அடியிலிருந்து 5,110 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109. 87 அடியிலிருந்து 1 10.07 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.50 டிஎம்சியாக உள்ளது.