வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கரிக்குளம் சபரி நகர் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீட்டின் வளர்ப்பு நாய் ஜானி விடாமல் குறைத்து கொண்டே இருந்தது. அதட்டியும் நிறுத்தவில்லை. எனவே சந்தேகம் அடைந்து வீட்டில் உள்ளவர்கள் நிலை வாசற்படி கதவை திறந்து பார்த்த போது சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு திறந்த கதவின் வாயிலாக உள்ளே புகுந்துவிட்டது. பயத்தில் என்ன செய்வது என விரட்ட முடியாமல் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டில் உள்ள குடும்பத்தினர் காட்டிய இடத்தில் சுமார் 30 நிமிடங்கள் நேரம் போராடி தேடிப் பார்த்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவின் அடியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒளிந்து கொண்டிருந்ததை கண்ட தீயணைப்புத் துறையினர் நவீன பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் கொண்டு அந்த பாம்பினை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.