சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் வாணவேடிக்கை! வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு இந்திய அணி 298 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் வாணவேடிக்கை! வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இலக்கு!
Published on
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 298 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா -வங்கதேசம் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களம்புகுந்தனர். அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.

கடந்த ஆட்டங்களில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். ரிசாத் ஹொசன் வீசிய ஓவரில் முதல் பந்து டாட் பால் ஆக அடுத்த 5 பந்துகளை சிக்ஸருக்கு அடித்து அமர்களப்படுத்தினார். இவர்களின் அதிரடியால் 10 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்கள் குவித்தது.

Shailendra Bhojak

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111 ரன்களும்(8 சிக்ஸர், 11 பவுண்டரி), சூர்யகுமார் யாதவ் 75 ரன்களும்(5 சிக்ஸர், 8 பவுண்டரி), ஹார்திக் பாண்டியா 47 ரன்களும் (4 சிக்ஸர், 4 பவுண்டரி), ரியான் பராக் 34 ரன்களும்(4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாசினர்.

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com