கவரப்பேட்டை விபத்து: 18 ரயில்கள் இன்று ரத்து

கவரப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து சனிக்கிழமை(அக்.13) 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Published on
Updated on
2 min read

கவரப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து சனிக்கிழமை(அக்.13) 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பெரம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னை-கூடூர் பிரிவில் இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, இதில் ரயிலின் 7 குளிர்சாதனப் பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் 19 பேர் காயமுற்றனர். அதில் 3 பேருக்கு மட்டும் அதிக காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

விபத்தைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தலா 2 தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதில் உருக்குலைந்தன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் 5 கிரேன்கள், 250 ரயில்வே பணியாளர்கள், 100 பேரிடர் மீட்புக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 350 பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

விபத்து நடந்த இடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் கூடுதல் பொது மேலாளர், தெற்கு ரயில்வே மற்றும் முதன்மைத் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றும் நிலையில், சனிக்கிழமை(அக்.13) 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 18 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

18 ரயில்கள் ரத்து

அதன்படி, திருப்பதி - புதுச்சேரி (16111), சென்னை- திருப்பதி (16203), சென்னை- திருப்பதி (16053) 2 மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை- திருப்பதி (16057), அரக்கோணம்- புதுச்சேரி (16401), கடப்பா- அரக்கோணம் (16402), அரக்கோணம் - திருப்பதி (06754), விஜயவாடா- சென்னை (12711), சூலூர்பேட்டை- நெல்லூர் (06745) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

18 ரயில் சேவைகள் மாற்றியமைப்பு

கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக சில ரயில்களின் சேவையை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12663 ஹவுரா- திருச்சி ரயில் எழும்பூர் வராமல் ரேனிகுண்டா, காஞ்சிபுரம், விழுப்புரம் மார்க்கமாகவும், 12511 கோரக்பூர்- கொச்சுவேலி ரயில் சென்னை வராமல் ரேனிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி மார்க்கமாகவும், 22663 எழும்பூர்- ஜோத்பூர் ரயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் மார்க்கமாகவும், 22606 நெல்லை- புரூலியா ரயில் அரக்கோணம் வராமல் மேல்பாக்கம், ரேனிகுண்டா மார்க்கமாகவும், 12603 சென்னை- ஹைதராபாத் ரயில் சூலூர்பேட்டை வராமல் அரக்கோணம், ரேனிகுண்டா மார்க்கமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com