அண்ணாமலைப் பல்கலை.பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக 86 ஆவது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமிக்கு  முனைவர்  பட்டத்தை வழங்கிய தமிழ்நாடு ஆளுநரும், பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி. உடன் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன், மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன், துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் எம்.பிரகாஷ்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக 86 ஆவது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமிக்கு முனைவர் பட்டத்தை வழங்கிய தமிழ்நாடு ஆளுநரும், பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி. உடன் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன், மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன், துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் எம்.பிரகாஷ்.
Published on
Updated on
1 min read

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழா மண்டபமான சாஸ்திரி அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் நேரடியாக 789 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மையில் தேர்ச்சி பெற்ற 38 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்க பதக்கம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

மேலும் ஆராய்ச்சி பட்டமான முனைவர், எம்ஃபில் 728 பேருக்கும் வழங்கப்பட்டது. 38 பேருக்கு தங்கப் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டது. நேரடி சேர்க்கை மூலம் பயின்ற மாணவர்கள் 789 பேருக்கும், தொலைதூரக்கல்வி மையம் உள்ளிட்ட பட்டம் பெறும் மாணவர்கள் 35,593 பேருக்கும் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். முன்னதாக துணைவேந்தர் ராம.கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் பங்கேற்றார். மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

விழாவில் பதிவாளர் எம்.பிரகாஷ் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகர், சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, பதிவாளர் மு.பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எஸ்.குமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் சீனுவாசன், ம. சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ (காட்டுமன்னார்கோயில்), கோ.அய்யப்பன் எம்எல்ஏ (கடலூர்), முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.