மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக புதன்கிழமை காலை வினாடிக்கு 16,196 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ரூ.1 கோடி கேட்டு வரதட்சிணை கொடுமை: பெண் மருத்துவா் தற்கொலை
அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
ஆணையின் நீர்மட்டம் 92 அடியிலிருந்து 93.35 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 56.56 டிஎம்சியாக உள்ளது.