
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், வியாழக்கிழமை(அக். 17) மீண்டும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 57,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க |3500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்!
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கும், கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.7,240-க்கு விற்பனையாகிறது.
பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. கூடிய விரைவில் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தொடும் என தங்கம் விற்பனையாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை அதிரடி உயர்வு
இதேபோன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.105-க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.