பிக் பாஸ் - 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளாக போட்டி நடைபெற்று வருகிறது.
சென்ற வாரம் நடைபெற்ற எவிக்சனில், குறைந்த வாக்குகள் பெற்றதன் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிக்க: அண்ணா என்றழைத்த சாய் பல்லவி..! கடுப்பான சிவகார்த்திகேயன்!
தற்போது, பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் வெளியேறப்போகும் நபர்களின் பட்டியலில் (நாமினேஷன்) மொத்தம் 10 பேர் இடம்பெற்று இருந்தனர்.
இந்தப் பட்டியலில் விஜே விஷால், தர்ஷா குப்தா, செளந்தர்யா, ரஞ்சித், கானா ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்ணவ், சாச்சனா ஆகிய 10 போட்டியாளர்கள் இருந்தனர்.
மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், குறைவான வாக்குகளைப் பெற்று நடிகர் அர்ணவ் வெளியேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் இன்றிரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகர் அர்ணவ் மனைவி திவ்யா செல்லவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவிவந்த நிலையில், அர்ணவ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.