கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயன்: முதல்வர் ஸ்டாலின்

மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சனிக்கிழமை (அக்.26) நடைபெற்ற சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டடாலின், மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் மனோகர்லால் கட்டா உள்ளிட்டோர்.
சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சனிக்கிழமை (அக்.26) நடைபெற்ற சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டடாலின், மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் மனோகர்லால் கட்டா உள்ளிட்டோர்.
Published on
Updated on
1 min read

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சனிக்கிழமை (அக்.26) நடைபெற்ற சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டடாலின், மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் மனோகர்லால் கட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

முத்தமிழறிஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசும் - மத்திய அரசும் இணைந்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம். ரூ. 22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.

நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ரூ. 63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

இதுவரை ரூ. 19 ஆயிரத்து 229 கோடி செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமருக்கும் - மத்திய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டாவது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com