சிம்புவின் புதிய பட மேக்கிங் விடியோ!

சிம்பு-49 படத்தின் மேக்கிங் விடியோ வெளியீடு.
சிம்புவின் புதிய பட மேக்கிங் விடியோ!
Published on
Updated on
1 min read

சிம்புவின் 49-வது படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் 48-வது படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும், தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து, சிம்பு - 48 படத்தின் தயாரிப்பிலிருந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாகவும், இப்படத்தை சிம்புவே தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், சிம்பு - 49 படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த விடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com