பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. பாரலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா பெற்றுள்ள பதக்கங்கள் விவரம்:
வில்வித்தை தங்கம் - 1 வெள்ளி - 0 வெண்கலம் - 1
தடகளம் தங்கம் - 4 வெள்ளி - 6 வெண்கலம் - 7
பாட்மின்டன் தங்கம் - 1 வெள்ளி - 2 வெண்கலம் - 2
ஜூடோ தங்கம் - 0 வெள்ளி - 0 வெண்கலம் - 1
துப்பாக்கிச்சுடுதல் தங்கம் - 1 வெள்ளி - 1 வெண்கலம் - 2