தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி: செல்வப்பெருந்தகை

எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதற்கு பெயர் தான் காமராஜர் ஆட்சி.
congress
செல்வப்பெருந்தகைDIN
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:

தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடப்பதால் அதனை காமராஜர் ஆட்சி என்று இவிகேஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது நடப்பது நல்லாட்சி என்பதில் சந்தேகம் இல்லை. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதற்கு பெயர் தான் காமராஜர் ஆட்சி.

இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், தெலங்கானா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காமராஜர் ஆட்சி நடைபெறுகிறது.

congress
மது போதையில் கல்லால் அடித்து ஒருவர் கொலை!

அதே வேளையில் காமராஜர் ஆட்சிக்கான தேவைகள் இருப்பதால் தான் காங்கிரஸை சேர்ந்த நாங்களும் சாலையில் நிற்கிறோம்.

விஜய் கட்சிப் பெயரை பதிவு செய்ததற்கு தற்போது சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை தெரிவித்தால்தான் அவர் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

பேச்சாளர் மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது. கைது செய்யவில்லை என்றால் ஏன் கைது செய்யவில்லை? என்று நீதிமன்றம் கேட்கும். கைது செய்யப்பட்டப் பின் பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன.

மூடநம்பிக்கைகளை பள்ளிகளில் கற்றுத் தருவது என்பது கண்டனத்திற்குரியது. இனி அதனைத் தவிர்க்க வேண்டும். அது எந்த மதமாக இருந்தாலும் சரி என்றார் செல்வபெருந்தகை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com